படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்குக்கு ‘பாண்டியன் நெடுஞ்செழியன்’ பெயர் சூட்ட தமிழ்த் தேசிய அமைப்புகள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்குக்கு ‘தமிழ் மாமன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன்’ பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி ஜல்லிக்கட்டு ஆதரவு தமிழ்த் தேசிய அமைப்பினர், மதுரை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஜல்லிக்கட்டு ஆதரவு தமிழ்த் தேசிய அமைப்புகள் சார்பில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் மாநகர் செயலாளர் கதிர் நிலவன் தலைமையிலானோர் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப் பதாவது: ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு பன்னெடுங்காலமாக தமிழர்களின் பண்பாட்டோடும், வாழ்வியலோடும் இணைக்கப்பட்ட வீர விளையாட்டாகும்.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக மதுரை அலங்காநல்லூர் அருகே தமிழக அரசால் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்குக்கு அரசியல் தலைவர் பெயரை சூட்டாமல் ‘தமிழ் மாமன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன் ஏறு தழுவுந் திடல்’ என்ற பெயரை சூட்டி தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் காக்க முன் வர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT