தமிழகம்

காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான அனுமதி டோக்கன் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை: அமைச்சர் பி.மூர்த்தி உறுதி

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மாவட்டத்தில் வரும் 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் விழாக் குழுவினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான அனுமதி டோக்கன்கள் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப் பூர்வ இணையதளம் வாயிலாக வெளிப் படைத் தன்மையுடன் வழங்கப்படும்.

மருத்துவ பரிசோதனை சான்று உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களையும் முறையாக சமர்ப்பித்து விண்ணப்பிக்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினார். ஆட்சியர் சங்கீதா, மாநகர காவல் ஆணையர் ஜெ.லோக நாதன், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சிவ பிரசாத், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், ஆ.வெங்க டேசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT