மதுரை: பொங்கல் பண்டிகையை முன் னிட்டு ஜன.15-ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் அரசு சார்பில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் விழா நேற்று நடைபெற்றது.
அமைச்சர் பி.மூர்த்தி கால்கோள் நடும் விழாவைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தொடங்கின. இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், முன்னாள் எம்எல்ஏ முத்து ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான கால்கோள் விழா நேற்று காலை நடந்தது. அமைச்சர் பி.மூர்த்தி போட்டிக்கான ஏற்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.