ஓசூர்: வனத்துறையைக் கண்டித்து, அஞ்செட்டியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் குமார வடிவேல் தலைமை வகித்தார். மாநில தலைவர் டில்லி பாபு, துணைத் தலைவர் சண்முகம் ஆகியோர் கோரிக்கை குறித்துப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ‘உரிகம் ஊராட்சி ஈரண்ணதொட்டி கிராமத்தில் மலை வாழ் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, மலை வாழ் மக்களைத் தாக்கிய வனத்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.
மலைவாழ் மக்கள் மீது போட்டப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.