சென்னை: அரசு போக்குவரத்து தொழிலா ளர்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்என்று முன்னாள் முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் உறுதியாக இருப்பதால், இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் ஆணையரகம் அழைப்பு விடுத்துள்ளது.
பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையிலும், அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள்மகிழ்ச்சியுடன் இருக்கும் வகையிலும், அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களை முதல்வர் அழைத்துப் பேசி, 15-வது புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கவும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கவும் உடனடி நடவடிக்கை எடுத்து, காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.