நாமக்கல்: சமயபுரம் மாரியம்மன் கழுத்தில் இருந்து தாலி இறங்கியதாக தகவல் பரவியதையடுத்து திருச்செங்கோட்டில் நேற்று முன்தினம் இரவு பொது மக்கள் தங்களது வீடுகளின் முன்பு விளக்கேற்றினர்.
திருச்சி சமயபுரத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி இறங்கியதாக நேற்று முன்தினம் இரவு வதந்தி பரவியது. இதனால் கணவன், மகன்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வீடுகளின் முன்பு பெண்கள் விளக்கேற்றி வழி பாடு நடத்த வேண்டும் எனவும் வதந்தி பரவியது.
இதையடுத்து திருச்செங்கோடு நரிப்பள்ளம் என்ற பகுதியில் பெண்கள் இரவு வேளையில் தங்களது வீடுகளின் முன்பு விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். அதேபோல் அருகே இருந்த மற்ற கிராமங்களிலும் பொது மக்கள் வழிபாடு நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.