தமிழகம்

வாக்குச்சீட்டு முறை மீண்டும் கிடையாது: தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் உறுதி

செய்திப்பிரிவு

சில அரசியல் கட்சிகள் வலியுறுத் தும் வகையில் வாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டு வரப் படாது. மின்னணு இயந்திர வாக்குப்பதிவு முறையே நீடிக்கும் என்று தலைமைத் தேர்தல் ஆணை யர் சம்பத் தெரிவித்தார்.

தென்மண்டல தலைமைத் தேர்தல் அலுவலர்கள் பங்கேற்ற பயிலரங்கம் வெள்ளிக்கிழமை புதுவை அக்கார்ட் ஓட்டலில் நடை பெற்றது. தேர்தல் மேலாண்மை, தேர்தல் செலவினம் கண்காணிப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்து விவாதிக்கப்பட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தலைமை வகித்தார்.

தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் பிரவீன்குமார், பன்வர் லால் (ஆந்திரா), நளினி நெட்டோ (கேரளம்), பி.ஜி.ஜாபர் (கர்நாடகம்), ரீனா ராய் (அந்த மான்), அசோக்குமார் (லட்சத்தீவுகள்), ஸ்ரீ காந்த் (புதுச் சேரி) மற்றும் காவல்துறை, தேர்தல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பயிலரங்கத்துக்கு பின் வி.எஸ்.சம்பத் செய்தியாளர்களிடம் கூறும் போது: கடந்த மக்களவைத் தேர்த லில் பங்கேற்ற தேர்தல் அலுவலர் கள் தாங்களாகவே சில முன்னோடி செயல்களை செய்துள்ளனர். பாராட்டுத்தக்க இந்த செயல் பாடுகள் மற்ற தேர்தல் அலு வலர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் பயிலரங்குகளை நடத்தி வருகிறது. கடந்த தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தான் வெற்றிகரமாக பயன்படுத்தப் பட்டது. சில இடங்களில் கோளாறு கள் நேரிட்டு சரி செய்யப்பட்டன. மின்னணு இயந்திர வாக்குப்பதிவு முறையில் தேர்தல் ஆணையம் முழு நம்பிக்கை வைத்துள்ளது.

சில அரசியல் கட்சிகள் கோரும் வகையில் வாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டு வரப்பட மாட்டாது. மின்னணு இயந்திர வாக்குப்பதிவு முறையே நீடிக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

ஒரு தனிநபர் யாருக்கு வாக்களித்தார் என்பதை அறிய முடியாது. ஆனால் ஒரு வாக்குச்சாவடியில் ஒட்டுமொத்த மாக யாருக்கு அதிக வாக்குகள் பதிவாயின என்பதை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் வாக் காளர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம். இதைத் தடுக்கும் வகையில் டோட்டலைசர் முறையை அமல்படுத்த மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதற்கு தேர்தல் சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும். அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளில் உள்ள 14 வாக்குச்சாவடிகளை ஒருங்கிணைத்து வாக்கு எண் ணிக்கை நடத்தப்பட்டால் ஓட்டு மொத்தமாக யாருக்கு வாக்களிக் கப்பட்டது என்பதை கண்டறிய முடி யாது. இத்திட்டம் அரசின் ஒப்பு தல் பெற்றுசெயல்படுத்தப்படும்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அதிகளவில் உள்ளனர். தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது. அவர்கள் தபால் மூலமோ அல்லது இணையதளம் மூலமோ வாக் களிப்பது குறித்து பரிசீலிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறது என்று சம்பத் தெரி வித்தார்.

SCROLL FOR NEXT