தமிழகம்

நடிகர் விஜய் மீது காலணி வீச்சு: விஜய் மக்கள் இயக்கம் போலீஸில் புகார்

செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோயம்பேடு போலீஸாரிடம் விஜய் மக்கள் இயக்கம் புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாக அதன் தென் சென்னை மாவட்ட தலைவர் தி.நகர் க.அப்புனு நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த கடந்த28-ம் தேதி இரவு நடிகர் விஜய்கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்துக்கு வருகை தந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விஜய்யை நோக்கி காலணி வீசியுள்ளார்.

இச்செயலில் ஈடுபட்ட, அந்த நபரைக் கண்டுபிடித்து அவர் மீதுசட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT