திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திலுள்ளஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக்கடைகளில் கூடுதல் மளிகைபொருட்களான சுண்டல், தேயிலைத் தூள், உப்பு, சோப்பு, சேமியா, ரவை உள்ளிட்டவைவிற்கப்படுகின்றன. இதில் சில பொருட்களில்உரிய தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, எடை உள்ளிட்டவை எதுவும் இன்றி விற்கப்படுவதாக, தொடர்ந்து மக்கள் புகார் கூறிகின்றனர். இதுதொடர்பாக திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணசாமி கூறியதாவது: மாதந்தோறும் நியாயவிலைக் கடைகளுக்கு மக்கள் செல்கின்றனர்.
ஆனால்,அங்கு பெறப்படும் பொருட்கள் உரிய தரத்தில் இருக்க வேண்டிய பொறுப்புஅரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் உண்டு. ஆனால், திருப்பூர் மாநகரில் வளர்மதி கூட்டுறவு சங்கத்துக்குட்பட்ட கடைகளில் விற்கப்பட்ட பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இல்லாதது தொடர்பாக, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு புகார் அளித்தோம். ஆனால், மக்கள் நம்பி வாங்கி பயன்படுத்தும் பொருட்களில் மிகுந்த அலட்சியத்துடன் அதிகாரிகள் செயல்படுகின்றனர் என்பதற்கு இச்சம்பவமே சான்று.
இதேபோல், பல்வேறு நியாயவிலைக்கடைகளில் பொருட்களை கட்டாயம் வாங்குமாறு வற்புறுத்துகின்றனர். இதனால் மக்களும் வேறு வழியின்றி பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனை குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் உட்பட அனைத்துதரப்பினரும் பயன்படுத்துவார்கள்.
ஆனால், அதில் உரிய தேதி, காலாவதி தேதி மற்றும்எடை அளவு உள்ளிட்டவை இல்லாமல்இருப்பது, மக்களின் ஆரோக்கியத்தின்மீது மிகுந்த அலட்சியத்துடன் மாவட்ட நிர்வாகம் இருப்பதாகவே தெரிகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடந்த கூட்டங்களிலும்புகார்கள் அளித்தோம். இதையடுத்து, வளர்மதி கூட்டுறவு அங்காடியில் பேக்கிங் பணியில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளை யாரும் கண்டுகொள்வதில்லை.
இதனால், அவர்களும் அலட்சியத்துடன் நடந்துகொள்கிறார்கள். இந்தவிஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம். மக்களின்உயிரோடு அலட்சியம் காட்ட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து பேச திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலரை பலமுறை தொடர்பு கொண்டும், அழைப்பை அவர் ஏற்கவில்லை.