தமிழகம்

நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றுமுதல் 6-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களிலும், 5-ம் தேதி தேனி மாவட்டத்திலும், 7-ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மேகமூட்டம் இருக்கும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலையில் லேசான பனிமூட்டம் நிலவும்.

SCROLL FOR NEXT