தமிழகம்

கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

கிளாம்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தைக் கடந்த டிசம்பர் 30-ம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைத்தார். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து வெளியேறும் பேருந்துகள் ஜிஎஸ்டிசாலையின் சர்வீஸ் சாலையில் இயக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்கின்றன. பேருந்துகள் இயக்கப்படும் சர்வீஸ் சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.இந்தபள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு சென்றுவர இந்த சர்வீஸ் சாலையையே பயன்படுத்தி வந்தனர்.

இதனிடையே பேருந்துகள் சர்வீஸ் சாலையில் இயக்கப்பட்டு வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேருந்துகளைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் போலீஸார் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.

மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு: ``மக்கள் வந்து செல்வதற்கு பேருந்து வசதிகளைக் கூட திட்டமிடாமல் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கம்பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்துள்ளனர்.

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சர்வீஸ்சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படுவதால் சிரமம் ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர். எனவே உடனடியாக உரிய வசதிகளை அரசுசெய்து தர வேண்டும்'' என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

SCROLL FOR NEXT