தமிழகம்

தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஜெயலலிதா வாழ்த்து

செய்திப்பிரிவு

தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழிசை சௌந்தரராஜனுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அனுப்பிய வாழ்த்து கடிதத்தில், "தாங்கள் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தங்களது பணி சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT