தனியார் நிறுவனங்களில் 25 வயதில் விருப்பஓய்வு அளித்து வீட்டுக்கு அனுப்புவதாக சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்திரராசன் கூறினார்.
தொழிற்சங்க அங்கீகார சட்டத்தை மத்திய மாநில அரசுகள் இயற்றக்கோரி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடந்தது. இதை கொடிய சைத்து தொடக்கி வைத்து பேசிய சவுந்திரராசன் மேலும் கூறியது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நோக்கியா உள்ளிட்ட ஆயிரக்கணக் கான பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒப்பந்த ஊழியர்களாகவும் குறைந்தபட்ச ஊதியமின்றியும், சமூக பாதுகாப்பு இன்றியும் வேலை செய்து வருகின்றனர். 25 வயதிலேயே விருப்ப ஓய்வு என்ற பெயரில் வீட்டுக்கு அனுப்பப் படுகின்றனர். பல நிறுவனங்கள் மூடப்படுகிறது. ஊழியர்களின் வேலை பறிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு தலையீடு இல்லை. இந்நிலையை போக்கிட மத்திய, மாநில அரசுகள் தொழிற்சங்க அங்கீகாரச் சட்டத்தை இயற்ற வேண்டும்.
நிரந்தரத் தொழில்களில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கான நலவாரிய செயல்படுகளை மேம்படுத்திட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களில் பணியிடை நீக்கம், பணி நீக்க நடவடிக்கைகளை கைவிட வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்திட வேண்டும்.
மோட்டார் சைக்கிள் பிரச்சாரம்
முறைசாரா தொழிலாளர் களுக்கான ஓய்வூதி யத்தை ரூ.4 ஆயிரமாக உயர்த்திட வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் தோறும் மக்களின் ஆதரவை பெறுவதற்காக மோட்டார் சைக்கிள் பிரச்சாரத்தை மேற்கொண்டி ருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு தலைவர் எஸ்.கண்ணன், செயலா ளர் இ.முத்துக்குமார், பொருளாளர் மதுசூதனன், துணைத்தலைவர் ஏ.வாசுதேவன், போக்குவரத்து ஊழியர் சங்க துணைப் பொதுச் செயலாளர் பி.ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.