மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 693 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 600 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக, விநாடிக்கு 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாகவும், அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு குறைவாகவும் இருப்பதால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 71.23 அடியாகவும், நீர்இருப்பு 33.76 டிஎம்சியாகவும் இருந்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாக இருந்தது. கடந்த 29-ம் தேதி முதல் நீர்வரத்தில் மாற்றமின்றி, விநாடிக்கு 1,200 கனஅடியாக நீடிக்கிறது.