கும்பகோணத்திலிருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் வெண்பட்டு குடைகளை தஞ்சாவூரில் வரவேற்று, முளைப்பாரியுடன் ஊர்வலமாகச் சென்ற பெண்கள். 
தமிழகம்

கும்பகோணத்தில் இருந்து அயோத்தி கோயிலுக்கு செல்லும் 8 வெண்பட்டு குடைகள்

செய்திப்பிரிவு

கும்பகோணம்:கும்பகோணத்தில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு 8 வெண்பட்டு குடைகள் நேற்றுமுன்தினம் கொண்டு செல்லப் பட்டன. அயோத்தியில் ராமர் கோயில்கும்பாபிஷேகம் ஜன.22-ம் தேதிநடைபெற உள்ளது. இதையொட்டி, அந்தக் கோயிலுக்கு வழங்குவதற்காக அகில பாரத இந்து மகா சபா சார்பில், கும்பகோணத்தில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 8 வெண்பட்டு குடைகள் நேற்று முன்தினம் கொண்டு செல்லப்பட்டன. நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளர் செந்தில் முருகன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ரமேஷ் பாபு, சிவசேனா கட்சி மாநிலத் தலைவர் மணிபாரதி, மாநிலத் துணைத் தலைவர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கும்பகோணம் மகாமக குளக்கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து 8 திருக்குடைகளுடன் புறப்பட்ட ஊர்வலம், பிரதான சாலைகள் வழியாகச் சென்று, ராமசாமி கோயிலைசென்றடைந்தது. பின்னர், அங்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த 8 குடைகளும், வாகனம் மூலம் திருச்சி, திண்டுக்கல் வழியாக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து, ரயில் மூலம் அயோத்தி சென்றடைகிறது. பின்னர், அங்கு இந்தக் குடைகள்சேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராயிடம் வழங்கப்படவுள்ளன. இத்தகவலை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT