டிஜிபி சங்கர் ஜிவால் 
தமிழகம்

தமிழகம் முழுவதும் 35 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் டிஎஸ்பிக்கள், உதவி ஆணையர்கள் என 35 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுபகுமார், மதுரை திடீர் நகர் சரக காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி விஜயகுமார், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். திருநெல்வேலி டவுன் சரக உதவி ஆணையர் கே.சுப்பையா, பழநி டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன், கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி சிவகுமார், திருப்பூர் மாவட்டம் அவிநாசிக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை அடையாறு சரக காவல் உதவி ஆணையர் எஸ்.நெல்சன், தாம்பரம் சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய சீனிவாசன், சைதாப்பேட்டை சரக உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள பட்டாபிராம் உதவி ஆணையர் சதாசிவம், சென்னை வண்ணாரப்பேட்டைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி டிஎஸ்பி ராஜ்குமார், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி டிஎஸ்பி காவ்யா, சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி, சென்னை க்யூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த கார்த்திக், முதல்வரின் பாதுகாப்பு பிரிவு டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். தாம்பரம் மணிமங்கலம் சரக உதவி ஆணையர் பி.கே.ரவி, தாம்பரம் காவல் ஆணையரக நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் டிஎஸ்பிக்கள், உதவி ஆணையர்கள் என 35 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT