கோவை: கோவை - பொள்ளாச்சி இடையேகூடுதலாக முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நேற்றுதொடங்கிவைத்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 75 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. இவற்றில் கோவை, மேட்டுப்பாளையம், உதகை, திருப்பூர் ரயில் நிலையங்களும் அடங்கும். கோவையில் இருந்து பெங்களூருவுக்கு வரும் 30-ம் தேதி புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். உதயநிதி ஸ்டாலின் ஒன்றும் கருணாநிதி கிடையாது. அரசியலில் கத்துக்குட்டியாக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். அரசியலில் பக்குவப்பட்ட தலைவராக அவர் நடந்துகொள்ள வேண்டும். மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால், தமிழகஅரசுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.