தமிழகம்

36-வது நினைவு தினம் எம்ஜிஆர் நினைவிடத்தில் பழனிசாமி நாளை அஞ்சலி

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக சார்பில் நாளை எம்ஜிஆரின் 36-வது நினைவு தினம் மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் நடைபெற உள்ளது. அதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று அஞ்சலி செலுத்துகிறார். இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 36-வதுநினைவு நாள் நிகழ்ச்சி சென்னை மெரினாகடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில்நாளை (டிச.24) காலை 10 மணிக்கு நடைபெறஉள்ளது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று அஞ்சலி செலுத்துகிறார். அதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

எம்ஜிஆர் நினைவு நாளில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சி, வட்டங்கள் அளவில் கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் நிர்வாகிகளும், தொண்டர்களும், எம்ஜிஆர் சிலைகள் மற்றும் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும், மலர்கள்தூவியும் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கட்சியின் பிற மாநிலங்களிலும் எம்ஜிஆர் படங்களை வைத்து மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT