தமிழகம்

சென்னை | ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது; 6 பேர் சரண்

செய்திப்பிரிவு

சென்னை: ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 6 பேர் கும்பலை பெரியமேடு போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை, பூங்கா நகர், வால் டாக்ஸ் சாலை, பிள்ளையார் கோயில்தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(39). ரவுடியான இவர், வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம், சென்ட்ரல் அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, அவரது உறவினர் குரு மற்றும்நண்பர் வசந்தகுமார் ஆகியோருடன் ரிப்பன் மாளிகை அருகே வந்தபோது அங்கு வந்த 10 பேர் கும்பல், பிரேம்குமாரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.

தனிப்படை போலீஸாரின் தேடுதல் வேட்டையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த பாலவாக்கத்தைச் சேர்ந்தமனோஜ் என்ற கும்கி (24), மந்தைவெளி அஜய் (20), கே.கே.நகர் துரைமுருகன் (18), அதே பகுதிரோஹித் (18), எம்ஜிஆர் நகர் சந்தோஷ் (18) ஆகிய 5 பேரை நேற்றுகைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 16 வயது சிறார் ஒருவரும் பிடிபட்டார். இக் கொலைக்கு மூளையாகசெயல்பட்ட சிவசங்கர் உள்ளிட்ட 6 பேர் பொன்னேரி நீதிமன்றத் தில் நேற்று சரணடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT