கோவை: திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சூலூரில் உள்ள இந்திய விமானப் படை தள நிர்வாகம் சார்பில், எம்.எல்.எச் மற்றும் ஏ.எல்.எச் ரகத்தை சேர்ந்த அதி நவீன ஹெலிகாப்டர்கள் மீட்பு மற்றும் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவை மதுரையில் இருந்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஹெலிகாப்டர்களில் 1.3 டன் எடையிலான பால், ரொட்டி உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.