தமிழகம்

வெள்ளக்காடான சாத்தான்குளம் - 500+ குடும்பங்கள் பரிதவிப்பு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: திருநெல்வேலி - தூத்துக்குடி நான்குவழி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சாத்தான்குளம் அருகே கோமாநேரி பகுதியில் உள்ள குளம் நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதால், வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வல்லநாடு அருகே உள்ள நாணல் காடு கிராமத்தில் தாமிரபரணி வெள்ளநீர் புகுந்ததால், 500-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

சாத்தான்குளம் அமுதுண்ணாகுடி பகுதியில் குளங்கள்உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து, கடல் போல் காட்சியளிக்கிறது. உதவிக்காக அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து திருச்செந்தூர் கோயிலுக்கு 50 பயணிகளுடன் வந்த சுற்றுலா பேருந்து வெள்ளத்தில் சிக்கியது. பயணிகள் மீட்கப்பட்டனர்.

செய் துங்கநல்லூர் பகுதியில் கிராமச்சாலைகள் துண்டிப்பு: கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகளவு செல்கிறது. செய்துங்கநல்லூர் அருகே அகரம், ஆழிக்குடி, முத்தாலங்குறிச்சி, நாணல்காடு, பொந்தன்புளி, எஸ்.என்.பட்டி, தூது குழி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கருங்குளத்தில் உள்ள குளத்தில் கரை உடைந்து, அப்பகுதியில் உள்ள 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். கோவில்பட்டியில் இருந்து மீட்பு பணிகளுக்காக சென்ற தீயணைப்புத்துறை வாகனம் கருங்குளம் அருகே பணியில் ஈடுபட்டபோது, வெள்ளத்தில் சிக்கியது. தண்ணீர் அதிகமாக வருவதை பார்த்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மக்கள் அப்பகுதியில் உள்ள உயரமான கட்டிடத்துக்கு சென்று தப்பியுள்ளனர்.

SCROLL FOR NEXT