மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் இருந்து கடந்த 30-ம் தேதி ஒரு உடல் மீட்கப்பட்டது. அது ஒடிசா தொழிலாளி பிரகாஷ்குமார் ராவின் உடல் என்று அடையாளம் கூறப்பட்டது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரி சோதனை செய்த பிறகு, உறவினர் களிடம் கடந்த 1-ம் தேதி ஒப்படைக் கப்பட்டது. இறுதிச்சடங்கு செய்வதற்காக ஒடிசா மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு உடலை அவர்கள் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பிரகாஷ் குமார் உயிருடன் இருந்தார். தவறாக ஒரு உடலை எடுத்துவந்தது தெரிய வந்தது. உடனடியாக இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு, உடலை மீண்டும் சென்னைக்கு கொண்டுவந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். அந்த உடல் பிரேதப் பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.