தமிழகம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்வு

செய்திப்பிரிவு

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணை நீர்மட்டம் ஏறத்தாழ 70 அடியாக உயர்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 2,464 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 2,371 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர்தேவைக்காக விநாடிக்கு 250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்வரத்தைக் காட்டிலும், தண்ணீர் வெளியேற்றம் குறைவாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 69.63 அடியாகவும், நீர் இருப்பு 32.38 டிஎம்சியாகவும் இருந்தது.

4,000 கனஅடி நீர்வரத்து: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 11-ம் தேதி நீர்வரத்து விநாடிக்கு 4,000 கனஅடியாக இருந்தது. 12-ம் தேதி காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாகக் குறைந்தது. அன்று முதல் 14-ம் தேதி வரை அதே அளவுடன் மாற்றமின்றி நீர்வரத்து தொடர்ந்தது.

இந்நிலையில், நேற்று காலைநீர்வரத்து விநாடிக்கு 4,000 கனஅடியாக அதிகரித்தது. நேற்று மாலையிலும் நீர்வரத்து 4,000 கனஅடியாகவே தொடர்ந்தது.

SCROLL FOR NEXT