திருவெண்ணெய்நல்லூர் அருகே பேரங்கியூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர். 
தமிழகம்

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் 25 கிராமங்களை இணைக்க முயற்சி: மக்கள் கடும் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் உள்ள 25 கிராமங்களை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், அப்பகுதி மக்கள் அதைக் கண்டித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அப் பகுதியினர் தெரிவித்தனர். விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கடந்த 2019-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவெண்ணெய்நல்லூர் பகுதிமக்களின் கோரிக்கையை ஏற்றுஅப்பகுதி விழுப்புரம் மாவட்டத்து டன் தொடர அனுமதிக்கப்பட்டது. தற்போது திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரங்கியூர் ஊராட்சி உட்பட 25 ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வரு கின்றன.

இதனை அறிந்த இப்பகுதி மக்கள் தமிழக முதல்வர் மற்றும்விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு இதுதொடர்பான தங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் மனுக்களை அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட அமைச்சர் மற்றும் தங்கள் பகுதி சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து மனுக்கள் அளித் தனர். இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க அரசு தரப்பில் இருந்து பரிசீலனை நடைபெறுவதாக கூறியதன் பேரில் பேரங்கியூர், அரசூர், ஆனத்தூர், மடப்பட்டு, பெரியசெவலை, சரவணம்பாக்கம் கூட்டுரோடு ஆகிய பகுதி மக்கள் தங்கள் கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க வேண்டாம் எனக் கூறிஎதிர்ப்பு தெரிவித்து நேற்று பேரங்கியூரில் போராட்டத்தில் ஈடுபட் டனர்.

போரட்டத்தில் ஈடுபட்டவர்கள், “எங்கள் பகுதி கிராமங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டால் வருவாய்த் துறை தேவைகளுக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டும். எங்க ளுக்கு விழுப்புரம் மாவட்டத்துடன் இருப்பதே வசதியானது. மீறி, அரசு அந்த மாவட்டத்துடன் எங்கள் கிராமங்களை இணைக்க முயற்சித்தால் நாங்கள் ரேஷன்அட்டைகளை மாவட்ட நிர்வாகத் திடம் ஒப்படைத்து, மக்களவைத் தேர்தலை புறக்கணிப்போம்” என்று தெரிவித்தனர். போராட்டத்தின் போது, இதுதொடர்பான துண்டு பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர். அரசியல் கட்சியினர் தங்கள் சுயலாபத்துக்காக இம்மாதிரியான இணைப்பு முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதற்கிடையே, இப்பிரச்சி னைக்காக மக்களவைத் தேர்தலைபுறக்கணிக்க போவதாக அப்பகுதி யில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை போலீஸார் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT