தமிழகம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

செய்திப்பிரிவு

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண மளிகை பொருட்களை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை அண்ணா நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4-ம் தேதி முதல் இதுவரை 60,000 மக்களுக்கு உணவு, பால் மற்றும் 2ஆயிரம் லிட்டர் தண்ணீர் விநியோகம் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் இன்று 80,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்ணாநகர் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.

SCROLL FOR NEXT