சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டிஉள்ளார். இதுதொடர்பாக அவர் தனதுஎக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை கொரட்டூர் அரசு உயர் நிலைப் பள்ளியில், 4-ம் வகுப்பு மாணவர்களை வைத்து மொட்டை மாடியில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வைத்துள்ள காணொலி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அரசுப்பள்ளி மாணவர்களை கழிப்பறைகள் சுத்தம் செய்ய வைப்பது, ஆபத்தான உயரத்தில் இருக்கும் நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வைப்பது என, தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள், அரசுப்பள்ளி மாணவ மாணவியரைமாற்றாந்தாய் மனப்பான்மை யுடன் தமிழக அரசு நடத்தி வருவதை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அன்புமணி வலியுறுத்தல்: பாமக தலைவர் அன்புமணிநேற்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை கொரட்டூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் மேல்நிலை குடிநீர்த் தொட்டியை, அங்கு பயிலும்4-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் மிகவும் ஆபத்தான சூழலில் தூய்மைப்படுத்தும் காணொலி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அவை சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதைக் கருத்தில் கொண்டு, பள்ளிகளின் பராமரிப்புக்காக அரசு கூடுதல் தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். வருங்காலங்களில் பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படாமல் இருப் பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.