தேமுதிக தலைவர் விஜயகாந்த் 
தமிழகம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்: மருத்துவமனை அறிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், 21 நாட்களுக்குப் பின்னர் குணமடைந்து விஜயகாந்த் இன்று வீடு திரும்பியுள்ளார்.

SCROLL FOR NEXT