தமிழகம்

போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் இன்று முதல் மாதாந்திர கடன் மனுக்கள் பெறப்படும்

செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான மாதாந்திர கடன் மனுக்கள் இன்று முதல் டிச.15-ம் தேதி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகிய கழகங்களைச் சார்ந்த பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். போக்குவரத்து பணியாளர்களின் சேமிப்பை ஊக்குவித்தல், கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை கூட்டுறவு சங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாதம்தோறும் கடன் மனுக்கள் பெறப்பட்டு, கடன் தொகை வழங்குவது வழக்கம். அதன்படி, இம்மாதத்துக்கான கடன் மனுக்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் கடன் தொகை: டிசம்பர் மாதத்தில் இன்று (டிச.11) முதல் டிச.15-ம் தேதி வரை கடன் மனுக்கள் பெறப்படும். போக்குவரத்துக் கழகங்கள் நிலுவைத் தொகை வழங்கியவுடன் தகுதியான மனுக்களுக்கு கடன் தொகை வழங்கும் தேதி அறிவிக்கப்படும். அதன் பிறகு முன்னுரிமை அடிப்படையில் கடன் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். கடன் பெற விரும்பும் பணியாளர்கள் நவம்பர் மாத சம்பள ரசீதை கடன் மனுவில் இணைக்க வேண்டும். மேலும் பிணையாளர் கடனுக்கு விண்ணப்பிக்காவிட்டால் அவருடைய மாத சம்பள ரசீதையும் இணைக்க வேண்டும்.

SCROLL FOR NEXT