சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் நேற்று விடுத்த அறிக்கை:
மக்கள் நீதி மய்யம், அதன் தலைவரின் மேற்பார்வையில் மக்களைச் சந்தித்து, நிவாரணப் பொருட்களையும், தேவைப்படும் உதவிகளையும் செய்து வருகிறது. ஆனால், மழை தொடங்குவதற்கு முன்னரே தலைமறைவான பழனிசாமி, பதுங்கு குழியிலிருந்து இப்போது தான் வெளியே வந்து மக்கள் தொண்டு புரிபவரை விமர்சிக்கிறார்.
கடந்த 2015-ம் ஆண்டில் வெள்ளத்தின் போதும் அவர்கள் யாரும் களத்தில் இல்லை, இப்போதும் மக்களுடன் இல்லை. தனது கொள்கையில் மாறாமல் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரை விமர்சிப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.