மேயர் பிரியா 
தமிழகம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி சென்னை மேயரை பொதுமக்கள் முற்றுகை

செய்திப்பிரிவு

சென்னை: அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தக் கோரி சென்னை மேயர் பிரியாவை மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை மற்றும் சுற்றுப் புறமாவட்டங்களில் தாழ்வான பகுதியில் நீர் தேங்கி பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மழை நின்ற பிறகும் நீர் அகற்றப்படாததால் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அவர்கள் அவதிய டைந்து வருகின்றனர். இதனால், மீட்பு பணிக்காக செல்லும் மக்கள் பிரதிநிதிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மீட்புபணியை விரைவுபடுத்தாதது ஏன் என்ற கேள்வியையும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரிடம் அவர்கள் முன்வைக்கின்றனர்.

இதற்கிடையே, பெரம்பூரின் 71-வது வார்டு கிருஷ்ணதாஸ் சாலை, மங்களபுரம், திருவள்ளு வர் தெரு, காந்திபுரம், அம்பேத்கர் தெரு, பனைமரத் தொட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் 4 நாட்களாக மின்சாரம் வழங்கப் படவில்லை. குடிநீர் கிடைப்பது பெரும் சவாலாக இருந்தது. மாநகராட்சி சார்பில் விநியோகிக் கப்படும் நீரில்கழிவு நீர் கலந்து வருவதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இதனால் நேற்று மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற மேயர்பிரியாவை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், அடிப் படை வசதிகளை வழங்குமாறு முற்றுகையிட்ட மக்களிடம், ‘‘இரவுக்குள் மின்சாரம் வழங்கப்படும். பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதுதொடர்பான அதிகாரிகளை பார்த்துவிட்டுதான் வந்திருக்கிறேன்’’ என மேயர் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT