மேட்டூர்: மேட்டூரை அடுத்த பாலமலையில் பெய்த கனமழையால் நீரோடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேட்டூர் அருகே பாலமலையில் 33 குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பாலமலையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக, பாலமலைக்கு செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் பாலமலையில் பெய்த மழையால் கோவில்பாளையம், கோம்பைகாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீரோடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மலையில் உள்ள கிராமங்களில் இணைப்புச் சாலைகளும் சேதமடைந்துள்ளன. இதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.