சென்னை: சென்னையில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் 18,400 போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினரும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், செம்பியம் காவலர் குடியிருப்புக்கு காவல் ஆணையர் நேற்று சென்று, காவலர்குடியிருப்பை ஆய்வு செய்தார். காவலர் குடும்பத்தினருக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பைவழங்கி குறைகளை கேட்டறிந்தார். அவற்றை உடனடியாக தீர்க்குமாறு உத்தரவிட்டார்.
பின்னர், பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலை, பள்ளிக்கூட சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி நிவாரண மையத்துக்கு சென்றார். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். அப்போது, கூடுதல் காவல் ஆணையர் (வடக்கு)அஸ்ரா கார்க், இணை ஆணையர் (வடக்கு) அபிஷேக்தீக்ஷித், துணை ஆணையர் (புளியந்தோப்பு) ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.