நாகை துறைமுக பகுதியில் உள்ள கடுவையாற்றில் இருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க படகில் சென்ற மீனவர்கள். 
தமிழகம்

8 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள்

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகையில் 8 நாட்களுக்கு பிறகு நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. தொடர்ந்து, நவ.27-ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என நாகை மாவட்ட மீன்வளத் துறையினர் தடை விதித்தனர்.

இதனால், நாகை மாவட்ட மீனவர்கள் நவ.28-ம் தேதி முதல் 8 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி தொழில் சார்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், புயல் கரையை கடந்ததையடுத்து, மீன்வளத் துறை சார்பில் நேற்று முன்தினம் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, மீனவர்கள் நேற்று அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் காலையில் இருந்து சில மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தேவையான டீசல், ஐஸ் கட்டிகள், தண்ணீர், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை சேகரித்து வைத்தனர். தொடர்ந்து, 8 நாட்களுக்கு பிறகு உற்சாகமாக கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் சென்றனர்.

SCROLL FOR NEXT