ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தி லிருந்து முதற் கட்டமாக ரூ.13 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சென்னைக்கு அமைச்சர் ஆர்.காந்தி நேற்று கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுளது. ராணிப்பேட்டை மாவட்டத் திலிருந்து தூய்மைப் பணியாளர்கள் 150 பேரும், அலுவலக பணியாளர்கள் 30 பேரும் என 180 பேர் திருவள்ளூர் மாவட்டத்துக்கு சீரமைப்பு பணிகளுக்காக சென்றுள்ளனர்.
மேலும், ராணிப் பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா, ஆற்காடு அரக்கோணம், சோளிங்கர், நெமிலி உட்பட 6 வட்டங்களில் இருந்து தொண்டு நிறுவனங்கள், உணவு பாதுகாப்பு, வருவாய், ஊரக வளரச்சித்துறை, வணிகர் சங்கங்கள் சார்பில் 300 அரிசி மூட்டைகள், தண்ணீர் பாட்டில், பிரெட், பிஸ்கெட், ரஸ்க், நாப்கின், லுங்கி, நைட்டி உட்பட ரூ. 13 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை முதற் கட்டமாக லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது.
இதனை, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு லாரியை கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், நீதியியல் வட்டாட்சியர் விஜயகுமார், அலுவலக மேலாளர் பாபு, திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத் உட்பட பலரும் பங்கேற்றனர். முன்னதாக, ராணிப்பேட்டை அருகே நவ்லாக் புளியங்கண்ணு பகுதியில் வசிக்கும் 56 குடு,குடுப்பை குடும் பங்களுக்கு 25 கிலோ அரிசி மூட்டைகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.