வேலூர்: மிக்ஜாம் புயல் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தொடர்ந்து தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து திருவள்ளூர் மாவட் டத்துக்கு 132 தூய்மைப் பணி யாளர்கள் நேற்று சென்றனர்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் வரலாறு காணாத கன மழை கொட்டியது. இதனால், நான்கு மாவட்டங்களில் மூன்றா வது நாளாக விடுமுறை அளிக் கப்பட்டுள்ளது. வெள்ள நீர் தேங்கி யுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வெள்ள பாதிப்பால் சாலைகள், தெருக்கள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் என பொது இடங்கள் அனைத்திலும் கழிவுகள், குப்பைகள் தேங்கியுள்ளன. இதனால், சுகாதார பணிகள் மேற்கொள்ள அண்டை மாவட்டங்களில் இருந்து சுகாதார பணியாளர்கள் வரவழைக்கப் பட்டுள்ளனர்.
அதன்படி, வேலூர் மாவட்டம் வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து 20 பணியாளர்கள் திருவள்ளூர் மாவட்டத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, வேலூர் ஒன்றியக் குழு தலைவர் அமுதா ஞானசேகரன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் இருந்து ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 132 தூய்மைப் பணியாளர்கள் 13 குழுக்களாக திருவள்ளூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்னளர். ஒவ்வொரு குழுவிலும் தலா ஒரு துணை வட்டார வளர்ச்சி அலுவலர், 2 ஊராட்சி செயலர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களிடம் தூய்மைப் பணிகள் செய்வதற்கு தேவையான அனைத்து உபகரணங்கள் மட்டு மின்றி அவர்கள் உடலுக்கும், உயிருக்கும் எந்த வித தீங்கும் ஏற்படாமல் தடுக்கவும் தேவையான பாதுகாப்பு உடை, கையுறை, காலணி, தலைக் கவசம் போன்றவையும் கொடுக் கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு உபகரணங்களை அணிந்தபடிதான் தூய்மைப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும், ஏதேனும் குறைகள் இருந்தால் அதிகாரிகளிடம் தெரிவிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் 3 நாட்கள் தங்கியிருந்து தூய்மைப் பணி களில் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது’’ என்றார்.
திருப்பத்தூரில் 275 பேர்...: திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து நிவாரண பணிகளுக்காக 275 பேர் நேற்று சென்னைக்கு விரைந்தனர். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, ‘‘ மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கன மழையால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டியது.
இதில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணா மலை ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து மீட்பு பணிகளுக்கான ஆட்கள் பிரத்யேக கருவிகளுடன் சென்னைக்கு இன்று (நேற்று) அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதன்படி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 நகராட்சிகளில் இருந்து 92 பேரும், 6 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து 150 துப்புரவுப்பணியாளர்கள், 20 கண்காணிப்பாளர்கள், 10 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என மொத்தம் 275 பேர் சென்னைக்கு இன்று (நேற்று) விரைந்துள்ளனர். நகராட்சி பகுதி களில் இருந்து செல்லும் 92 பேர் சென்னை பூந்தமல்லி பகுதியில் மீட்புப்பணிகளில் ஈடுபடுவோர்கள்.
ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இருந்து செல்பவர்கள் மறைமலை நகர் பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவார்கள். இவர்கள் அனைவரும் அடுத்த 3 நாட்களுக்கு அங்கேயே தங்கி மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள். மீட்புப் பணிக்கு தேவையான கருவிகள் ( டார்ச் லைட், கயிறு, ரப்பர் படகு, 20 கிலோ வாட் திறன் கொண்ட 10 ஜெனரேட்டர், கையுறைகள், மாஸ்க், சீருடை, தண்ணீரை இறைக்க வாளி, முதலுதவி பெட்டிகள், பினாயில், பிளீச்சிங் பவுடர் ) உடன் கொண்டு சென்றுள்ளனர்.