அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் ஊராட்சிக்கு உட்பட்ட தனியார் மண்டபத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க் கிழமையன்று மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பொது மக்களின் பாதுகாப்பு கருதி இந்த மாதத்தில் இன்று ( 5-ம் தேதி ) நடைபெற இருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ரத்து செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.