ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. மாவட்டம் நிர்வாகம் சார்பில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் நலன் கருதி நேற்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இன்றும் (5-ம் தேதி) அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.