பயணிகள் பேருந்துகள் மூலம் வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படங்கள்: வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

மிக்ஜாம் புயலால் வேலூரில் நிறுத்தப்பட்ட ரயில் பயணிகள்: பேருந்துகளில் அனுப்பி வைப்பு

செய்திப்பிரிவு

வேலூர்: மிக்ஜாம் புயல் மழையால் பெங்களூருவில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் சிறப்பு பேருந்துகள் மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக வட தமிழகத்துல் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னையில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்படி, பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி நேற்று பிற்பகல் சென்ற விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, பயணிகள் சென்னை செல்வதற்காக மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகள் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கும், அங்கிருந்து சென்னைக்கு கூடுதலாக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை செல்லும் ரயில்கள் நேற்று காட்பாடியில் நிறுத்தப்பட்டன. பயணிகள் சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்த கோட்டாட்சியர் கவிதா. அருகில், வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர்.

இந்த பணிகளை வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ் வரன் உள்ளிட்டோர் மேற்கொண்டனர். மேலும், பயணிகளின் பாதுகாப்பு கருதி காட்பாடி ரயில் நிலையம் மற்றும் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT