பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

திண்டுக்கல் - பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை பணி நிறைவடையாத நிலையில் சுங்க கட்டணம் வசூலிப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி

செய்திப்பிரிவு

ஒட்டன்சத்திரம்: நான்கு வழிச்சாலை பணி நிறைவடையாத நிலையில், ஒட்டன் சத்திரம் அருகே சத்திரப்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராள மான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், திண்டுக்கல் - பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு சாலைப் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன.

பல இடங்களில் சாலைப் பணிகள் நிறைவடைந்து உள்ளன. சில இடங்களில் சாலைப் பணி, மேம்பாலப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. எனவே, முழுமையாக பயன்பாட்டுக்கு வராத இந்த சாலையை, திண்டுக்கல்லில் இருந்துவரும் பெரும் பாலான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டியில் திண்டுக்கல் - பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் சுங்கச்சாவடி மையம் அமைக்கப்பட்டு, நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து, கார், லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மேலும், 20 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராமத்தினருக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதில் சலுகைகள் அளிப்பதாகவும் அறிவிக் கப்பட்டுள்ளது. சாலைப் பணி முழுமையாக நிறைவடையாத நிலை யில், சுங்கக் கட்டணம் வசூலிப்பதால், வாகன ஓட்டுநர்கள், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT