சென்னை: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை மெட்ரோ ரயில் அலுவலகத்தில், அந்நிறுவனத்தின் இயக்குநர்ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும்இயக்கம்) தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், அவர் தெரிவித்ததாவது: மழைக் காலத்தில் ஏற்படும் எந்தச் சூழலையும் சமாளிக்க சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செயல்படுகிறது. மழை நீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அங்கு மின் மோட்டார் மூலம்மழை நீரை வெளியேற்ற பல்வேறு திறன்களைக் கொண்ட 350 நீர் பம்புகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
சைதாப்பேட்டை, கோயம்பேடு,மீனம்பாக்கம், புதிய வண்ணாரப்பேட்டை போன்ற உயர்மட்ட பாதையில் இருந்து சுரங்கப் பாதைக்கு செல்லும் வழியில் மழைநீர் சுரங்கப்பாதைக்கு செல்லாத வகையிலும்,அப்பகுதிக்கு யாரும் மழைநீரை திருப்பி விடாமல் இருப்பதை கண்காணிக்கவும் காவலர்கள் நியமிக் கப்பட வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின்கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களையும் கண்காணிக்க குழு அமைக்கப்பட வேண்டும். இதற்காக 24 மணி நேரமும் செயல்பட உதவி எண் 1860-425-1515 பயன்பாட்டில் உள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் 2-ம்கட்டத்தில் பணிகள் நடைபெறும் பகுதிகளில் 20 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.