தூத்துக்குடி: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை (டிச.3) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (டிச.4) மாலை சென்னைக்கும், மசூலிபட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு, வங்கக்கடலில் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகி உள்ளது என்பதை தெரிவிக்கும் வகையிலும், கடலில் சற்று பலமாக காற்று வீசலாம் என்பதை அறிவிக்கும் வகையிலும் துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வழக்கம்போல் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 70 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்