தமிழகம்

மழைநீர் தேங்கிய பகுதிகளில் குளோரின் மாத்திரைகள் விநியோகம் @ சென்னை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில், மக்கள் பாதுகாப்பான குடிநீர் பயன்படுத்துவதை உறுதி செய்ய, அங்குள்ள குடியிருப்புகளுக்கு தேவையான அளவு குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதைப் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் களப்பணியாளர்களால் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும்1000 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மழைக் காலம் என்பதால் தினசரி 300 இடங்களுக்கு பதிலாக600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT