புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியின் நினைவிடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடத்திய பொதுமக்கள். படம்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

யானை லட்சுமிக்கு முதலாண்டு நினைவஞ்சலி: கடலை மிட்டாய், பழங்கள் வைத்து படையல் @ புதுச்சேரி

செய்திப்பிரிவு

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமிக்கு பிடித்த கடலை மிட்டாய், பழங்கள் வைத்து பொதுமக்கள் முதலாண்டு நினை வஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி கோயி லுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது. கடந்தாண்டு நவம்பர் 30-ல் யானை லட்சுமி தனது வசிப்பிடமான ஈஸ்வரன் கோயில் வீதியிலிருந்து நடை பயிற்சி சென்ற போது காமாட்சியம்மன் கோயில் வீதியில் விழுந்து மார டைப்பால் உயிரிழந்தது. யானை லட்சுமி இறந்து ஓராண்டு ஆன நிலையில் நேற்று முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி புதுச்சேரி வனத்துறை அருகே மலர்களால் அலங் கரிக்கப்பட்ட யானை லட்சுமி நினைவிடத்தில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவனடியார்கள் சிறப்பு பூஜை செய்து புனித நீரை யானையின் நினைவிடத்தின் மீது ஊற்றி சிவ வாத்திய முழங்க அஞ்சலி செலுத்தினர். மேலும் லட்சுமி யானைக்கு பிடித்தமான பழங்கள் மற்றும் காய்கறிகள் கடலை மிட்டாய் ஆகியவைகளை வைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேபோல் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் நிர்வா கத்தின் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. அஞ்சலி செலுத்த ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

SCROLL FOR NEXT