சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
சென்னை, மதுரை, கோவை மற்றும் திருவையாறு அரசு இசைகல்லூரிகள் மற்றும் இசைப்பள்ளிகள், சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகள், மாமல்லபுரம் அரசினர் கட்டிட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி உள்ளிட்ட 25 இடங்களிலும் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் உள்ளன.
ஒவ்வொரு இடத்திலும் நான்கு வகையான நாட்டுப்புறக் கலைகளில் ஓராண்டு சான்றிதழ் பயிற்சியாக வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை 25 மையங்களிலும் 1.12.2023 முதல் தொடங்குகிறது. 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேரலாம்.