தமிழகம்

டிச.1-ம் தேதி முதல் மாதாந்திர அட்டையில் ஆவின் `டிலைட் பால்' விநியோகம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நிறுத்திவிட்டு, 3.5 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட டிலைட் ஊதா நிற பாக்கெட்டை விநியோகிக்க ஆவின் நிறுவனம் முடிவு செய்தது. கடும் எதிர்ப்பு காரணமாக பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தப் போவதில்லை என்றும், அதேநேரத்தில் டிலைட் பால் விற்பனையை ஊக்குவிக்கப் போவதாகவும் ஆவின் நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில், ஆவின் ஊதா நிற பாக்கெட் பால் (டிலைட் பால்) டிச.1-ம் தேதி முதல் மாதாந்திர அட்டை மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, "பச்சை நிற பாக்கெட் பால் வழக்கம்போல விற்பனை செய்யப்படும். மேலும், ஆவின் அட்டை மூலமாக `டிலைட் பால்' விற்பனை டிச.1-ம் தேதி தொடங்கப்படும். 500 மி.லி. பால் ரூ.21-க்குவழங்கப்பட உள்ளது. இதற்கான மாதாந்திர அட்டை பெற ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்" என்றனர்.

SCROLL FOR NEXT