நடிகை குஷ்பு | கோப்புப் படம் 
தமிழகம்

குஷ்பு வீடு முற்றுகை முயற்சி: காங்கிரஸார் மீது வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு சமீபத்தில் பதிவிட்ட சமூக வலைதள பதிவால் சர்ச்சை ஏற்பட்டது.

இதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார், கண்டனம் தெரிவித்தோடு, குஷ்பு இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். குஷ்பு மறுத்ததால், ரஞ்சன் குமார் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் சென்னை சாந்தோம், மாதா சர்ச் சாலையிலிருந்து பட்டினப்பாக்கத்தில் உள்ள குஷ்பு வீடு நோக்கி முற்றுகையிட புறப்பட்டனர்.

அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ரஞ்சன் குமார் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மீது பட்டினப்பாக்கம் போலீஸார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். குஷ்புவீட்டுக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT