தமிழகம்

அறக்கட்டளைகளுக்கு வருமான வரித் துறை எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: உரிய கால அவகாசத்துக்குள் ஆண்டுக் கணக்கைத் தாக்கல் செய்யாத அறக்கட்டளைகளுக்கு வரிச் சலுகை ரத்து செய்யப்படும் என வருமானவரி துறை எச்சரித்துள்ளது. சேவை அடிப்படையில் செயல்படும் அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தல அறக்கட்டளைகள் ஆகியவற்றுக்கு வரி சலுகை அளிக்கப்படுகிறது. ஆனால், அறக்கட்டளைகளாக செயல்படும் நிறுவனங்கள் வருமானவரித் துறைக்கு உரிய கால அவகாசத்துக்குள் ஆண்டு கணக்கான ரிட்டர்னை தாக்கல் செய்வதில்லை என புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, அறக்கட்டளை கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வருமானவரி துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், வருமானவரி துறை அறிவிக்கும் அவகாசத்துக்குள் இனி கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். இதில், தாமதம் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட கணக்குதாரர்களின் வரிச் சலுகை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT