திருச்சி: நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் ஈகியர் நாள் நினைவேந்தல் மற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது: ”ஈழத்தில் இனம், மொழி அழிந்தது குறித்து தமிழகத்தில் இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் வாதிகள், ஆட்சியாளர்கள், கவலைப்படவில்லை. இன்றைக்கு இலங்கை கடலுக்கு அடியில் சீன படைகள் இருந்துகொண்டு தமிழக மீனவர்களை தாக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
விழிப்புணர்வே விடுதலையின் முதல்படியாக இருப்பதால், இங்கு நடக்கும் தமிழர்களின் அதிகாரம் மற்றும் உரிமை இழப்பை எதிர்த்து போராடக் கூடிய விழிப்புணர்வை ஒவ்வொருவரும் பெற வேண்டும். லட்சியத்தை உறுதியாக கொண்டு இன்றைக்கு கேள்விக் குறியாகும் தமிழர்களின் அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், கட்சி சார்பில் குடங்களில் ஒட்டப்பட்ட ஸ்கேனர் கோடு மூலம் டிஜிட்டல் முறையில் கட்சி நிதி வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.