தமிழகம்

ஆவின் பாலகத்தில் மளிகைப் பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து- அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

ஆவின் பாலகத்தில் மளிகை பொருட்கள், சிற்றுண்டி உள்ளிட் டவற்றை விற்பனை செய்தால் அந்த பாலகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று பேரவையில் பால்வளத் துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்தார்.

சட்டப்பேரவையில் வியாழக் கிழமை கேள்வி நேரத்தின்போது காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. முருகுமாறனின் கேள்வி மற்றும் திண்டுக்கல் எம்.எல்.ஏ. பாலபாரதியின் துணைக் கேள்விக்கு பதில் அளித்து பால் வளத்துறை அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:

ஆவின் பாலகங்களில் பால் மற்றும் அதன் உபபொருட்கள் தவிர வேறு எந்தப் பொருட்களை யும் விற்கக்கூடாது என்று விற்பனையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட் டுள்ளது. ஆனால், ஆவின் பாலகங்

களில் சிற்றுண்டி, மளிகைப் பொருட்கள் விற்கப்படுவதாகவும், அதை முறைப்படுத்த வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதுபோல ஆவின் பாலகங்களில் வேறு பொருட்கள் விற்பது கண்டறியப் பட்டால் பாலகத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.

SCROLL FOR NEXT