தமிழகத்தில் மின்வெட்டு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் திங்கள் கிழமை தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி பேசும்போது, “தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு விதிக்கப் பட்டுள்ள மின்வெட்டு காரணமாக பெரும் பாதிப்பு ஏற்படுகிறது” என்றார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, “கடந்த திமுக ஆட்சியில் 2008-ம் ஆண்டு தொழிற்சாலை களுக்கு விதிக்கப்பட்ட மின்வெட்டு, இந்த ஆண்டு எங்களால் நீக்கப்பட்டுள் ளது. இப்போது மின்வெட்டு முழு மையாக நீக்கப்பட்டுவிட்டது” என்றார்.
அதையடுத்து மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசும்போது, “தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை தீர்ந்துவிடக் கூடாது என்று மத்திய அரசு முட்டுக்கட்டை போட்ட போதிலும், முதல்வரின் விடா முயற்சியால் இப்போது மின்வெட்டு பிரச்சினை இல்லை. தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.